கனடா செல்லவிருந்த முல்லைத்தீவு இளைஞன் மரணம் : பொலிசார் அதிர்ச்சித் தகவல்!!

1866

வவுனிக்குளத்தில் இருந்து புதன்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கனடா செல்வதற்கு தயாராக இருந்த முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியை சேர்ந்த ஆனந்தராசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞன் வவுனிக்குளத்தில் இருந்து நேற்றியதினம் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழப்பதற்கு முன்னர் இளைஞன், சுமார் இருபது இலட்சம் ரூபாய் பணத்துடன் யோகபுரத்தில் திங்கட்கிழமை (29) இரவு பாண்டியன் குளம் சென்றிருந்தார்.



அதன்பின்னார் வீடு திரும்பாத இளைஞரை உறவினர்கள் அவரை தேடிய நிலையில் வவுனிக்குளம் குளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உடலத்தை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். ஏச் .மக்ரூன்ஸ், சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்றது. உடற்கூற்று பரிசோதனையின் முடிவில் இளைஞன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையைமுன்னெடுத்து வருகின்றனர்.