கண்ணீருக்கு பதிலாக கல்லை சிந்தும் அதிசய சிறுமி!!(வீடியோ)

850

Stone

ஏமன் நாட்டில் 8 வயது சிறுமி ஒருவர் கல் மழை பொழிவது அந்நாட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஏமனின் மேற்கு ஹொடைடா மாகாணத்தில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது சாலே அல் ஜஹாராணி. 2 மனைவிகளின் மூலம் 20 பிள்ளைகளுக்கு தந்தையான இவரது 8 வயது மகள் சாடியா அல் ஜஹாராணி.

கடந்த 15 நாட்களாக இவளது விழிகளில் இருந்து சின்னச் சின்ன சரளை கற்கள் கண்ணீர் போல கொட்டத் தொடங்கியுள்ளது.



இதை கண்டு பதறிப்போன சாடியாவின் தந்தை மருத்துவர்களிடம் அழைத்து சென்று எவ்வளவோ மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தும், இந்த விசித்திர நோய்க்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என அவர்கள் கை விரித்து விட்டனர்.

சாடியா அல் ஜஹாராணியின் கண்களில் இருந்து நூறு கற்களுக்கு மேல் கொட்டியதாக கூறும் இவர், அவற்றை எல்லாம் ஒரு பெரிய கிண்ணத்தில் சேமித்து வைத்துள்ளார்.

மூட நம்பிக்கையில் இருந்து இன்னும் விடுபடாத அந்த கிராமத்தை சேர்ந்த சிலர், சாடியாவுக்கு தீய ஆவிகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாகவே இப்படியொரு விசித்திரம் நடப்பதாகவும் கதைகட்டி வருகின்றனர்.