திருமணத்தின் மூலம் கின்னஸ் சாதனை படைத்த ஜோடி!!

458

பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீட்டர் (35.54 அங்குலம்) ஆகும். கட்யூசியாவின் உயரம் 91.13 சென்டி மீட்டர் (35.88 அங்குலம்) ஆகும்.



இருவருமே எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள். “ இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் நட்பான இவர்கள் 2006ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர்.

அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முறை சந்தித்து பேசிய அவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என இவர்களை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது.

தங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில் பயனர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.