ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை!!

343

2024 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் இரண்டாவது மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை(Sri Lanaka) பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்ட ஆசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களின் பட்டியலிலேயே இலங்கை இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நாட்டின் தனித்துவமான கலாச்சார அனுபவங்கள், இயற்கை அழகு, செழிப்பான தேயிலை தோட்டங்கள், பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் மற்றும் பலதரப்பட்ட வனவிலங்குகளுக்கு பெயர் பெற்ற ஒரு நாடாக இலங்கை அமைந்துள்ளது.



குறித்த பட்டியலில் இந்தோனேசியா முதலாவது இடத்தையும் இலங்கை இரண்டாவது இடத்தையும் தாய்லாந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், மே மாதத்தில் இதுவரையில் 79,431 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.