வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இளம் பெண்ணுக்கு இடைநடுவில் நேர்ந்த துயரம்!!

524

வெளிநாடொன்றில் இருந்து 03 வருடங்களுக்குப் பின்னர் வீடு திரும்பிய பெண்ணொருவர் இடைநடுவே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சம்பவத்தில் பசறை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த பெண் கடந்த மூன்று வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



பெல்மடுல்ல பகுதியில் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதி வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரில்ஹேன பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர் .

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்த பெண் உட்பட மூன்று பயணிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பெல்மடுல்ல, கஹவத்தை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்திருந்த நாடு திரும்பிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.