மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டுபிடிப்பு!!

520

மீரிகம ரயில் பாதைக்கு அருகில் தலையில் காயங்களுடன் உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீரிகம விஜய ரஜதஹான மற்றும் மீரிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் திலினாகம பிரதேசத்தில் ரயில் பாதைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

விளையாட்டுத்துறை அமைச்சில் அலுவலக உதவியாளராக கடமையாற்றிய சந்திம லக்மால் பெரேரா என்ற 28 வயதுடைய திருமணமாகாத இளைஞனே உயிரிழந்துள்ளார்.



நேற்று மதியம் தானம் வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதாகவும், பிற்பகலில் இருந்து அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவில் எங்கு பயணம் செய்தார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மீரிகம ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி துசித பிரமோத் விஜேவர்தன மற்றும் பொலிஸ் குற்றத்தடுப்புப் புலனாய்வு அதிகாரிகள் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் அவரது இல்லத்திலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும் போது ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணம் நிகழ்ந்தா அல்லது வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களால் ஏற்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.