நடு வானில் திடீரென குலுங்கிய விமானம் : 12 பேர் காயம்!!

379

கத்தார் ஏர்வேஸ்-க்கு நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. QR017 என்ற விமானம் கத்தார் நாட்டின் தோஹா நகரில் இருந்து டப்ளின் நகருக்கு புறப்பட்டு சென்ற நிலையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதன்போது விமானத்தில் பயணித்த ஆறு பயணிகள் மற்றும் ஆறு ஊழியர்கள் என 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து விமானத்தில் காயமடைந்த 12 பேருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன் டப்ளின் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அவசர சேவைகள் வழங்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



துருக்கி வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது விமானம் பலத்த குலுங்களுக்கு உள்ளானதாக குறிப்பிடப்படுகிறது.

அண்மையில் லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம் இதேபோன்று நடுவானில் குலுங்கிய போது அதில் பயணித்த 73 வயது முதியவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.