நினைவுகளின் கனவுத் தொடர்…

661

வானம்
சூரிய குளியலுக்காய் தயாராகியது..

நிலவு இலவச மின்சாரத்தை
இடை நிறுத்திக் கொண்டது..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நட்சத்திரங்கள்
தலையணை தேடின..

சேவல்களும் குயில்களும்
செய்தி அறிவித்தன..



கதிரவன் வரவேற்பு
புன்னகைக்காய்
மொட்டுக்கள்
உதடுகள் அசைக்கத்
தொடங்கின..

அவள் விழிகளுக்கு மட்டும்
இன்னும் விடியவில்லை
ஏனெனில்..
அவன் நினைவுகளின்
கனவுத் தொடர்
இன்னும் முடியவில்லை..

-திசா.ஞானசந்திரன்-