விமானநிலையத்தில் வெளிநாட்டு பெண் கொடுத்த அதிர்ச்சி!!

566

7 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 57 வயதுடைய பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவர் இன்று (20) காலை 9.45 மணியளவில் அபுதாபியிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.



இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர் கொண்டுவந்த பயணப் பொதியிலிருந்து 2 கிராம் 450 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.