14 வயது தம்பியை செல்போன் தராததால் கொலை செய்த அண்ணன்!!

548

ஆந்திர மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவர், தனது தம்பியை சுத்தியால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திராவின் ஆனேக்கல் தாலுகாவைச் சேர்ந்தவர் சிவகுமார் (18). இவரது 14 வயது சகோதரர் பிரானேஷ் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்தார். பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த பிரானேஷ், கோடை விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் புறநகர் பகுதியில் பிரானேஷ் தலை, வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, பிரானேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.



பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில் சிறுவன் ஆயுதத்தால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து சிறுவனின் சகோதரர் சிவகுமார் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

செல்போனில் ஒன்லைன் கேம்ஸ் விளையாடும் ஆர்வம் கொண்டவர் சிவக்குமார். ஆனால் தனது தம்பி பிரானேஷ் செல்போனை வாங்கி விளையாடியதுடன் திருப்பி கேட்கும்போது தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், அவரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து கொன்றுள்ளார்.

இதுதொடர்பான காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகி இருந்தது. அதனைக் கைப்பற்றிய பொலிஸார் சிவக்குமாரை கைது செய்தனர்.