உலகின் உயரமான பெண்ணாக கின்னசில் இடம்பிடித்த இளம்பெண்!!

634

உலகிலேயே அதிக உயரத்தை கொண்டவர் என்ற கின்னஸ் சாதனை சான்றிதழ், துருக்கியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

துருக்கியின் சப்ரன்பலு காராபக் பகுதியை சேர்ந்த ருமிஷா ஜெல்கி (17) என்ற இளம்பெண் 7.09 அடி உயரத்தை கொண்டுள்ளார். இவரது கைகள் மட்டும் 24.5 செ.மீ நீளமும் கால்கள் 30.5 செமீ நீளமும் கொண்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மேலும் இவரது ஷூவின் அளவு 12 ஆக இருப்பதால், அமெரிக்காவில் இருந்து தனியாக இவருக்கான ஷூக்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் (Weaver Syndrome ) என்ற நோயின் காரணமாக இவர் பாதிக்கப்பட்டுள்ளதால் தான் அதிக உயரம் வளர்ந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.



தற்போது 11ம் வகுப்பு படித்து வரும் ருமிஷா வீட்டிற்கே சென்று கின்னஸ் அதிகாரிகள் உலகின் மிக உயரமான இளம் பெண் என்ற சான்றிதழை வழங்கியதால் அவர் பெரும் மகிழ்ச்சயடைந்தாக தெரிவித்துள்ளார்.

h1 h2 H3 H4