இந்தியாவின் மும்பையில் விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், வீசிய பலத்த காற்றினால் இந்த விளம்பர பலகை இடிந்து விழுந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த இந்த விளம்பர பலகை இடிந்து வீழ்ந்ததில் , பல வாகனங்களும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விளம்பரப் பலகை சட்டப்பூர்வ அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிர முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.