தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கான தகவல்!!

1322

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 182,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகிறது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த நிலையில் இரண்டு இலட்சத்தை அண்மித்த தங்க விலையானது திடீரென குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஏற்றத்தை பதிவு செய்து வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் (13.05.2024) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 182,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலையானது 22,840 ரூபாவாக காணப்படுகிறது. மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 199,300 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.