சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த காதலன்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

466

நான்கு ஆண்டுகளாக காதலித்த பெண்ணை சாதியைக் காட்டி காதலன் திருமணம் செய்ய மறுத்ததார். இதனால் அந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் கலபுர்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கர்நாடகா மாநிலம், கலபுர்கியில் உள்ள காந்தி நகரைச்ச் சேர்ந்தவர் கிரண். கலபுர்கி புறநகர் பகுதியில் உள்ள யாலாலிங் காலனியைச் சேர்ந்தவர் புஷ்பா. இவர் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்தார்.

இந்த நிலையில் கிரணும், புஷ்பாவும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். புஷ்பா வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால், இளைஞரின் காதலை அவரது வீட்டினர் ஏற்கவில்லை. ஆனாலும், புஷ்பாவுடன் கிரண் பழகி வந்துள்ளார்.



கடந்த சில நாட்களாக தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கிரணிடம் புஷ்பா வலியுறுத்தி வந்தார். தனது குடும்பத்தினர் சாதியைக் காரணம் காட்டி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், எனக்கு திருமணமே வேண்டாம் என்று கிரண் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், கிரணை சந்தித்த புஷ்பா, மீண்டும் திருமணத்திற்கு வலியுறுத்தியுள்ளார். ஆனால், சாதி பிரச்சினையை மீண்டும் கிரண் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த புஷ்பா, வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பல்கலைக்கழக காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து புஷ்பா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், புஷ்பா தற்கொலை விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் கலபுர்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.