கிரிக்கெட் விளையாடிய போது நேர்ந்த சோகம் : அந்தரங்கப் பகுதியில் பந்து பட்டதில் சிறுவன் பலி!!

516

கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவன் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் மைதானத்திற்குள் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்தியாவின் மகாராஷ்டிரா புனேவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஷௌர்யா என்ற 11 வயது சிறுவனே உயிரிழந்தவராவார்.

குறித்த சிறுவன் பந்து வீசிய நிலையில் துடுப்பாட்ட வீரர் பந்தை நேரடியாக அவரை நோக்கி அடித்துள்ளார். இதில் ஷௌர்யாவின் அந்தரங்க பகுதியில் பந்து பலமாக பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.



இதையடுத்து சிறுவன் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.