குழந்தையின்மை சண்டையால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

465

தமிழக மாவட்டம் வேலூரில் பெண்ணொருவர் குழந்தையின்மையால் கணவருடன் ஏற்பட்ட தகராறில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வேலூர் மாவட்டம் கொசவன்புதூரைச் சேர்ந்தவர் லிஷா (33). இவரது கணவர் பிரதீப் (40) கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அமமுக பொறுப்பாளராக உள்ளார்.

இந்த தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக பிரதீப் மற்றும் லிஷா இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் தம்பதி இருவரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் லிஷா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் மின்விசிறியில் தூக்கிட்டுக்கொள்ள முயன்றுள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து லிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லிஷா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் லிஷாவின் தந்தை தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பொலிஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.