கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்கள் : சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

1195

கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையை சேர்ந்த தாயும், அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கையரும் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என்ற மாணவன் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.



இந்நிலையில், நேற்றைய தினம் ஒட்டாவாவில் உள்ள நீதிமன்றத்தில் தொலைபேசி மூலம் சந்தேகநபர் முன்னிலையான போது ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர், தனது பெயர், பிறந்த திகதி மற்றும் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள திகதி ஆகியவற்றை மாத்திரம் தெரிவித்துள்ளார்.

மேலும்,சந்தேகநபரின் மனநிலை குறித்து விரிவான மதிப்பீடு செய்ய இன்னும் பல மாதங்கள் ஆகும் என அவரின் சட்டத்தரணி இவான் லிட்டில் தெரிவித்துள்ளார்.