லண்டனில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

743

லண்டனில், சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்திய இளம்பெண் ஒருவர், லொறி மோதி பலியானதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

லண்டனில் கல்வி கற்பதற்காகச் சென்றிருந்த இந்தியப் பெண்ணான Cheistha Kochhar (34), கடந்த செவ்வாயன்று, அதாவது, மார்ச் மாதம் 19ஆம் திகதியன்று, சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார். அவரது கணவரான Prashant, அவருக்கு சில அடிகள் முன்னால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, குப்பை சேகரிக்கும் லொறி ஒன்று Cheistha மீது மோதியுள்ளது. சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த Prashant, மனைவிக்கு உதவ ஓடோடிச்சென்றுள்ளார். மருத்துவ உதவிக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தும் Cheisthaவைக் காப்பாற்ற முடியவில்லை.



உயிரிழந்த Cheistha, ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரியாகிய Lieutenant General Dr SP Kochhar என்பவரின் மகள் ஆவார்.

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள Bareilly என்னுமிடத்தைச் சேர்ந்தவரான Cheistha, பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்றுள்ளார். தேசப்பற்று மிக்கவரான அவரது நோக்கம் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்புவது என்று கூறியுள்ளார் Cheisthaவின் தந்தை.

Cheisthaவின் உயிரிழப்பால் அதிர்ச்சியடைந்துள்ள அவரது சகாக்கள், சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள். Cheisthaவின் தந்தை மகளுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.