இந்தியாவில் பரவும் ஆபத்தான கோவிட் வைரஸ் இலங்கையிலும் நுழைந்துள்ளதாக எச்சரிக்கை!!

691

இந்தியாவில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்தியாவில் பரவி வரும் ஒமிக்ரோன் JN1 கோவிட் வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தாம் நம்புவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் சந்திம ஜீவந்தேர தெரிவித்துள்ளார்.



கொவிட் பரிசோதனைகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால் இலங்கையின் பரவல் பற்றிய உண்மைகளை விஞ்ஞான ரீதியாக முன்வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வயதானவர்கள், பல்வேறு நோய்களால் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், அதேபோல் மோசமான காற்றோட்டம் உள்ள நெரிசலான சூழலில் முகக் கவசங்கள் மீண்டும் பயன்படுத்துவது மிகவும் முக்கியம் எனன பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

காய்ச்சல், இருமல், வாசனை, சுவை இழப்பு, நீடித்த அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, சாப்பிட இயலாமை மற்றும் வாந்தி உணர்வு ஆகியவை இந்த வகையின் அறிகுறிகளாகும்.இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் செயற்பாட்டில் உள்ளதால், அதிக ஆபத்துள்ள மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வது முக்கியம் என சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் கொச்சி நகரில் காய்ச்சல் போன்ற நோயின் காரணமாக பரிசோதிக்கப்பட்ட நோயாளிகளில் 30 சதவீதம் பேர் இந்த வகை கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.