புத்தளத்தில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய 30 அடி நீளமுடைய புள்ளிச் சுறா!!

693

புத்தளத்தில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

புத்தளம் உள்ள தொடுவா கடலில் மீனவர் ஒருவரின் வலையில் பாரிய புள்ளிச்சுறா ஒன்று சிக்குண்டு உயிருடன் கரையொதுங்கியுள்ளது. இச்சம்பவம் புத்தளம் மதுரங்குளி தொடுவா பகுதியில் இன்றைய தினம் (21.12.2023) நண்பகல் இடம்பெற்றுள்ளது.



குறித்த மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 30 அடி நீளமுடைய புள்ளிச்சுறா மீனொன்றே சிக்கியுள்ளது. இதனையடுத்து, குறித்த புள்ளிச் சுறா மீனை மீனவர்கள் பாரிய பிரயத்தனத்திற்கு மத்தியில் இயந்திரப்படகு உதவியுடன்,

மீண்டும் கடலில் விடுவிட்டதாக மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த சுறா மீன் சுமார் 30 அடி நீளமுடையது எனவும் சுமார் 2000 கிலோவிற்கும் அதிக எடையுடையதாக காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.