5 வயது சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய விரிவுரையாளருக்கு நேர்ந்த கதி!!

1166

மாத்தறையில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மாத்தறையில் சிறுமியொருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் குறித்து ருஹுனு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளர் ஒருவர் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தத்தெடுக்கப்பட்ட ஐந்தரை வயது சிறுமி ஒருவரே, விரிவுரையாளரால் கொடூரமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விரிவுரையாளர் சிறுமியை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தியதாக கடந்த வெள்ளிக்கிழமை (15.12.2023) பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இதன்படி, சம்பா தினத்தன்றே சிறுமியை ​பொலிஸ் காவலில் எடுத்து சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மேலும், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி தாக்குதலுக்கு மற்றும் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது.