இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நபர் : இப்படியும் நேர்மையான ஊழியர்கள்!!

819

அனுராதபுரத்தில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அனுராதபுரத்தில் திருட்டு, குற்றச்செயல்கள் அதிகம் இடம்பெறும் காலகட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கூடிய பையையும் மடிக்கணினியையும் மறந்து விட்டு சென்றுள்ளார்.



இந்த நிலையில் அதனை உரியவரிடமே திருப்பிக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தம்புள்ளையில் இருந்து அக்குறணை நோக்கி பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பயணி ஒருவரே பையை மறந்துவிட்டு இறங்கியுள்ளார்.

அந்த பையில் 5 லட்சம் ரூபாய் மற்றும் மடிக்கணினியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பணம் மற்றும் மடிக்கணினியின் அடையாளத்தை சரிபார்த்த பின்னர், பேருந்து சாரதி மற்றும் உதவியாளர் பொருட்களை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.