தமிழர் பகுதியில் பெரும் சோகம் : பிள்ளையின் பிறந்த தினத்தன்று தந்தை உயிரிழந்த சோகம்!!

1582

மட்டக்களப்பில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



பிள்ளையார் கோயில் வீதி பட்டிப்பளை பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய தவராசா திலகராஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று தனது பிள்ளையின் பிறந்த தினத்திற்காக உணவுப்பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொணடிருந்த போது பாம்பு தீண்டியுள்ளது. மயக்கமுற்ற நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக, சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.