தமிழர் பகுதியில் மர்மமாக உயிரிழந்த வைத்தியர்!!

1365

அம்பாறையில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தங்கியிருந்த தனியார் விடுதியின் அறையில் அவரது உடல் மீட்கப்பட்டதாக அம்பாறை பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



மருத்துவர் பணிபுரியும் பிரிவுக்கு வரவேண்டிய தினத்தில் வருகைத்தராமையினால் அவருடன் பணியாற்றுபவர்கள் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர். எந்த பதிலும் கிடைக்காததால் செவிலியர் ஒருவர் மருத்துவமனை ஊழியரை அவர் தங்கியிருந்த அறைக்கு அனுப்பியுள்ளார்.

வீட்டுக்குச் சென்று தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்திய போதும் பதிலளிக்காமததால் பொலிஸாருக்கு அறிவித்து வீட்டு உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கதவை உடைத்து பார்த்த போது வைத்தியரின் உடல் அசைவின்றி காணப்பட்டுள்ளது.

உடனடியாக அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்தது சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குருநாகல் பகுதியைச் சேர்ந்த பிரசன்ன பண்டார ரத்நாயக்க என்ற வைத்தியரே உயிரிழந்துள்ளார்.​​ மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதால், சடலம் உறவினர்கள் வரும் வரை அம்பாறை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.