வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பும் (படங்கள்,வீடியோ)

2281

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று (05.04.2023) புதன்கிழமை இடம்பெற்றது.

காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து பாற்குட பவனியாக ஹொரவப்பொத்தான வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பிற்பகல் அபிசேகம் வீதி உலா என்பன இடம்பெற்று மாலை தீமிதிப்பு உற்சவம் இடம் பெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதிக்கும் உற்சவத்தில் பங்கு பற்றியிருந்தனர்.அம்பாள் வசந்த மண்டப பூஜையின் பின் உள்வீதி வெளிவீதி சிம்ம வாகனத்தில் வலம்வந்து ஆலயத்துக்கு முன்புறம் தீமிதிப்புக்ககாக தயார் செய்யபட்ட பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாட்சி வழங்க தயாரான நிலையில் அம்பாளின் பக்தர்கள் கடும் நெருப்பு கொண்ட குழியை தமது நேர்த்திகளை நிறைவேற்ற அருள்புரியுமாறு அம்பாளை வேண்டிபாடி தீமிதித்து சென்றனர் .

வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் காப்பு கட்டி விரதமிருந்த அடியார்களே தீமிதிப்புக்கு அனுமதி வழங்கப்படுவது வழமையாகும்.