12 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவா : விவாகரத்து விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சினேகா – பிரசன்னா!!

882

சினேகா – பிரசன்னா..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசியாக இருந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை சினேகா 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.



திருமணத்திற்கு பின் இரு குழந்தைகளை பெற்றப்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் சினேகா – பிரசன்னா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதெல்லாம் பொய் என்று பிரச்சனா பதிலளித்திருந்தார்.

இதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்காத சினேகா, தற்போது கணவர் பிரசன்னாவுடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து அனைத்து விவாகரத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.