வவுனியாவில் ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தால் பார்வையற்ற குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!!

1288

இராஜேந்திர குளம் கிராமத்தில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இலங்கை ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச நிறுவனம், இராஜேந்திர குளம் கிராமத்தில், வவுனியா பிரதேச செயலாளர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் பகவான் பாபாவின் அருளால் 05 மில்லியன் செலவில்,



நன்னீர் குழாய் கிணறு, மின்சாரம் உட்பட சகல வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு பார்வையற்ற தம்பதிகளான திரு திருமதி எஸ்.சஞ்சீவன் அவர்களிடம் நேற்று (04.12.2022) கையளிக்கப்பட்டது.

கையளிக்கும் நிகழ்வில் இலங்கை ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தின் தலைவர் திரு வி. மனோகரன், வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் திரு.என்.கமலதாசன் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார், உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.