கனடாவில் இந்துக் கோவில் உடைப்பு – குற்றவாளிகள் கமராவில் பதிவு..

693

Canada

கனடாவில் இந்துக் கோவில் ஒன்று அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. கனடாவில் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே லட்சுமி நாராயண் இந்து கோவிலின் ஜன்னல்களை கடந்த 23-ம் திகதி சிலர் அடித்து உடைத்து சென்றுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்தநிலையில் அங்குள்ள இரகசிய கேமிராவில் இருவர் பேஸ்போல் மட்டையை வைத்துக்கொண்டு கோவிலின் ஜன்னல்களை உடைத்துவிட்டு மட்டையை தூக்கி எறிந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இது இன ரீதியிலான வெறுப்புணர்விலேயே நடந்து இருக்கலாம் என்று அங்குள்ள இந்துக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், சர்ரே பொலிசார் இன ரீதியிலான வெறுப்பு உணர்வாக தோன்றவில்லை, இது தனிப்பட்ட முறையிலான ஒரு தாக்குதலாக தெரிவதாக அவர்கள் கூறியுள்ளனர்.



இந்த தாக்குதலுக்கு குடியுரிமை அமைச்சர் ஜெசன் கென்னி கண்டனம் தெரிவித்துள்ளார்.