உதவி இயக்குனரை தாக்கிய ஹீரோ : நடந்தது என்ன?

527

நடிகர் நவீன்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடித்து வரும் நடிகர், தனது சீரியலில் உதவி இயக்குனராக வேலை செய்பவரை தாக்கியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



சிரியல் நடிகர் நவீன் சமீபத்தில் பிரபல செய்தித் தொகுப்பாளர் கண்மணி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனியார் தொலைக்காட்சியில், கண்ட நாள் முதல் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் நவீன், சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

மேலும், தனது சீரியலில் காவலராக நடித்தும், மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்திருக்கிறார் நவீன். சென்னை மதுரவாயிலில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் தனியார் ஷூட்டிங் ஹவுசில் இவரது, கண்ட நாள் முதல் சீரியலில் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த ஷூட்டிங் மிகப் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், நேற்று, அதே சீரியலில் உதவி இயக்குனராக இருக்கும் குணசேகரன் என்பவரைத் தாக்கியுள்ளார் நவீன். இதனால், மூக்கு மற்றும், கன்னம் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உதவி இயக்குநர் குணசேகரன், மதுரவாயில் காவல் நிலையத்தில், நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தான், ‘கண்ட நாள் முதல்’ சீரியலின் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாகவும் இதில் கதாநாயகனாக நடித்து வரும் நவீன் என்பவர் சூட்டிங் சீன் எடுக்க நேரமாகிவிட்டது வாருங்கள் என்று அழைத்ததற்கு எல்லாம் எனக்கு தெரியும் என்று கூறியும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின், மதுரவாயில் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இரு தரப்பினரையும் அழைத்து பேசிய போது, மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களது சங்கங்கள் மூலமே இதனை பேசிக்கொள்வதாக இரு தரப்பினரும் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக சோசியல் மீடியாக்களில் ரீல்ஸ் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்திழுத்த கண்மணி நவீன் குமார் ஜோடி, தற்போது இண்டஹ் சம்பவத்தால் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

செய்தி தொகுப்பாளர் வீட்டிலேயே குற்றச்சம்பவம் நடந்திருப்பதால், அந்த செய்தியை எப்படி கண்மணி தொகுத்து வழங்கப்போகிறார் என்றெல்லாம் ஒரு சில நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் மட்டுமின்றி, நவீன் குமார், பூலோகம், மிஸ்டர் லோக்கல், பட்டாசு போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.