வவுனியா செட்டிகுளம் ஆதார வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்களும் ஆர்ப்பாட்டம்!!

1010

வவுனியா செட்டிகுளம் ஆதார  வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து தமது பணியைத் தொடர்ந்து செய்வதற்கு ஏதுவாக எரிபொருள் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி இன்று27.07.2022 வியாழக்கிழமை வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்.

தமது பணியை செய்வதற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான நடைமுறையை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக்கோரி இவ் ஆர்ப்பாட்ட  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடந்த காலங்களில் வைத்தியசாலை பணியாளர்களிற்காக விசேட தினத்தில் தனியொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த செயற்பாடானது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டதுடன், பொதுமக்களின் வரிசையின் ஊடாகவே எரிபொருளினை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. இதனால் தமது கடமைக்கு உரிய நேரத்திற்கு செல்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.