முறையற்ற காதலால் நாசமான குடும்பம் : சைக்கோ கணவனின் கொடூர செயல்!!

782

கர்நாடகாவில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கர்நாடகாவில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை பிள்ளைகள் கண்முன்னே இழுத்து சென்று கொலை செய்த கணவனின் செயல் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கெண்டகோசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி கவுடா (35). இவருக்கும் பெங்களூரூவைச் சேர்ந்த யோகிதா (27) என்ற பெண்ணுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளனர். இந்த அழகான குடும்பத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு குண்டு விழுந்ததை போல ஒரு சம்பவம் உருவாகியது.

ரவி கவுடாவுக்கு அழகான மனைவி இருக்கும் நிலையில் அவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி நெருங்கி பழகி வந்துள்ளனர். இதை ஒருநாள் யோகிதா பார்த்துவிட்டார். ஆத்திரம் அடைந்த யோகிதா கணவன் ரவி கவுடாவிடம் சண்டை போட்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து ஊர் பஞ்சாயத்து நடத்தி ரவி கவுடாவை எச்சரித்து யோகிதாவை சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின்னரும் ரவி கவுடா தனது கள்ளகாதலியுடன் பழகுவதை நிறுத்தவில்லை. இதனால் தினமும் வீட்டில் சண்டை இருந்து வந்துள்ளது . இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இரவு ரவி கவுடா தனது இரு குழந்தைகளுக்கும் பானிபூரி வாங்கி வந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிடக்கூடாது என யோகிதா பிள்ளைகளை கூறியுள்ளார். இதனால் மீண்டும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு ரவி கவுடா யோகிதாவின் தலை முடியை பிடித்து அறைக்குள் இழுத்து சென்றுள்ளார்.

பின்னர் யோகிதாவின் கழுத்தை மின்சார ஒயரால் இறுக்கி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். அறையை விட்டு வெளியே வந்த ரவி கவுடா பசங்களிடம், இதை வெளியே சொல்ல கூடாது எனக்கூறிவிட்டு தப்பியோடியுள்ளார். இதனை அடுத்து ரவியின் மூத்த மகள் எதிர்வீட்டில் இருப்பவர்களிடம் தகவலை கூறவே அவர்கள் உடனே யோகிதாவின் வீட்டுக்கு விஷயத்தை சொல்லி வரவழைத்தனர்.

இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அரக்கெரே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை பிள்ளைகள் கண்முன்னே இழுத்து சென்று கொலை செய்த கணவனின் செயல் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.