கடன் தொல்லையால் தாய், மகள் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

587

கடன் பிரச்சினையால்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வருசநாடு அருகே கடன் பிரச்சினையால் தாய், மகள் தற்கொலை செய்த வழக்கில், வட்டிக்கு பணம் கொடுத்தவர் கந்து வட்டி தடை சட்டத்தில் கைது.



தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள பூசிணியூத்து கிராமத்தை சேர்ந்த நல்லுச்சாமி என்பவரின் மனைவி ஆண்டிச்சி (வயது35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

பூசணியூத்து கிராமத்தில் ஆண்டிச்சி மட்டும் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். விவசாயம் மற்றும் மாடுகள் வளர்த்து வந்தார். மகள் காவியா பிளஸ்2 படித்து வந்தார். மகன் கிருஷ்ணகுமார் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

 

ஆண்டிச்சிம்மாள் பால் பண்ணை நடத்துவதற்காக அதே ஊரை சேர்ந்த அடைக்கலம் என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். அதிகமான வட்டி காரணமாக வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் தவித்தார்.

மேலும் தான் குடியிருந்த வீட்டையும் அடைக்கலத்திற்கு ஈடாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கொடுத்த பணத்தை கேட்டு அடைக்கலம் தொந்தரவு செய்ததால், மனமுடைந்த ஆண்டிச்சி தனது மகள் காவியா, மகன் கிருஷ்ணகுமார் ஆகிய 3 பேரும் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் விஷமாத்திரையை தின்றதில், ஆண்டிச்சி மற்றும் மகள் காவியா இறந்துவிட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்பிழைத்தார். இந்நிலையில் கடன் கொடுத்த அடைக்கலம், ஆண்டிச்சியின் அப்பா மொக்கராஜிடம் மகள் வாங்கிய கடனை தரும்படி கூறி மிரட்டியதாக தெரிகிறது.

இதனையடுத்து மொக்கராஜ், அடைக்கலம் மீது வருசநாடு போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் இருவர் தற்கொலைக்கு தூண்டியதாகவும், கந்து வட்டி தடை சட்டத்திலும் அடைக்கலத்தை போலீசார் கைது செய்தனர்.