தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் பெண் : வினோத சம்பவம்!!

883

குஜராத்தில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்திய மாநிலம் குஜராத்தில் இளம் பெண் ஒருவர் ‘சோலோகாமி’ என்று சொல்லப்படும் முறையில் தன்னைத்தானே திருணம் செய்துகொள்ள உள்ளார்.



க்ஷமா பிந்து (Kshama Bindu) எனும் 24 வயதான அப்பெண் வரும் ஜூன் 11-ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை என்று யாரும் இல்லை.

பிந்து, சோலோகாமி (Sologamy) என்று சொல்லப்படும் முறையில், தன்னைத் தானே திருமணம் செய்யவுள்ளார். தன் மீது தானே கொண்ட அதீதமான காதலினால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

குஜராத்தில்லேயே முதல்முறையாக சோலோகாமி திருமணம் செய்யும் முதல் பெண் க்ஷமா பிந்து தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. “நான் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் மணமகளாக மாற விரும்பினேன்.

அதனால் நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்” என்று அவர் கூறியுள்ளார். இந்த சுய திருமணத்தை வெறும் விளம்பரம் என்று கூறுபவர்ககளுக்கு பதிலளித்த பிந்து, “உண்மையில் நான் சித்தரிக்க முயற்சிப்பது பெண்களின் முக்கியத்துவத்தைத்தான்” என்று கூறியுள்ளார்.

ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிந்து, தனது முடிவுக்கு தனது பெற்றோர் ஆதரவாக இருப்பதாகவும் கூறினார். அனைத்து சடங்குகளையும் பின்பற்றுவதுடன், மணமகள் தனக்கென ஐந்து சபதங்களையும் எழுதி வைத்துள்ளார். திருமண விழாவிற்குப் பிறகு, பிந்து கோவாவில் இரண்டு வார தேனிலவுக்குச் செல்கிறார்.