இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்!!

917

அகதிகளாக..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரிலிருந்து இன்றும் படகுகள் மூலம் 19 பேர் தமிழகம் சென்றடைந்துள்ளனர்.



திருகோணமலையைச் சேர்ந்த 10 பேர் இரண்டு கை குழந்தைகளுடன் மன்னாரிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ராமேஸ்வரம் மெரைன் பொலிஸார்இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் மன்னாரிலிருந்து நேற்று இரவு யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரைச் சேர்ந்த 9 பேர் ஒரு படகில் மன்னாரிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்து இறங்கி பின்னர் அரசு பேருந்து மூலம் தானாக மண்டபம் அகதிகள் முகாமிற்குச் சென்றனர். இது குறித்துத் தகவலறிந்த மண்டபம் மெரைன் பொலிஸார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், தமிழகத்துக்கு அகதிகளாக வந்தாக பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கைத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்குப் பின் 19 இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதையடுத்து 39 இலங்கையர்கள் அகதிகளாக இந்தியா சென்றுள்ளனர். கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கடல் வழியாகத் தனுஷ்கோடிக்குச் சென்று தஞ்சமடைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.