நாயை கடித்துக் குதறிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி..!

646

யாழ்ப்பாணம், திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இன்று (26) காலை மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரி வீதியூடாக சென்று கொண்டிருந்தவேளை இளைஞனை நாய் துரத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த இளைஞன் துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கிச் சென்று நாயைக் கடித்துக் குதறியுள்ளார்.



இதனால் நாய்க்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதோடு குறித்த இளைஞரும் காயமடைந்துள்ளார்.

இரத்தப் போக்கு கரணமாக நாயைக் கடித்த இளைஞன் மயக்கமடைந்துள்ளார்.

அவ் இளைஞன் பிரதேசவாசிகளின் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

26 வயதான குறித்த இளைஞன் யாழ். திருநகர் இராஜேந்திரா வீதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.