பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

931

பேருந்து கட்டண அதிகரிப்பு..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கான கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி,



ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 3 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.

ஆகக்குறைந்த பேருந்து கட்டணமாக இருந்த 14 ரூபா பேருந்து கட்டணம், 17 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது. இந்த பேருந்து கட்டண திருத்தமானது, எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.