உலகின் பிரபலமான நாய்க்குட்டி- பேஸ்புக்கில் 20 லட்சம் ரசிகர்கள்!!!

841

 

பேஸ்புக்கில் ஒருவருக்கு 20 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர் எவ்வளவு பெரிய விஐபியாக இருக்க வேண்டும். உண்மையிலேயே இந்த விஐபி ஒரு அழகான நாய்க்குட்டி. பெயர் ஃபூ மனியா.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இது அமெரிக்காவில் வசித்து வருகிறது. இதன் உரிமையாளரின் பெயர் ஜஸ்டின் பைபர். பொமரேனியன் வகையைச் சேர்ந்த ஃபூமனியா உலகின் மிகப் பிரபலமான நாயாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஃபூ வுக்கு தற்போது ஏழு வயதாகிறது. அமெரிக்காவின் உத்தியோகபூர்வ செல்லப்பிராணி தொடர்பாளராக பணி புரிகிறது இந்த அழகி.



2009ல் ஃபூவிற்கென தனி பேஸ்புக் கணக்கு தொடங்கப் பட்டது. அதில், ஃபூ அழகாக சிரிக்கும் படங்களும், அது செய்யும் சேட்டைகளின் வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டன.

அன்றிலிருந்து ஃபூ விற்கு லைக்குகளும், ரசிகர்களும் குவிந்த வண்ணம் உள்ளனராம். தற்போது கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டு உலகின் மிகப் பிரபலமான நாய் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது ஃபூ.

அழகான மேனி , குட்டிக் கண்கள் என ஃபூவை பார்த்தாலே கவிதைப்பாடத் தோன்றும் . அவ்வளவு அழகான் ஃபூ முதன் முதலில் கலந்து கொண்டது அவலட்சணமான நாய்களுக்கான அழகுப் போட்டியில் தானாம்.

ஜஸ்டின் பைபர் முயற்சியால் அழகு தேவதையாக மாறியதாம் ஃபூ. விளையாட்டாகத் தான் ஃபூவிற்கு பேஸ்புக் பக்கம் ஆரம்பித்தாராம். ஆனால், ஃபூ இன்று இவ்வளவு பிரபலமாகி விட்டது என ஆச்சர்யம் தெரிவிக்கிறார் ஜஸ்டின்.

கடந்த ஏப்ரலில் சில நலம் விரும்பிகள் ஃபூ இறந்து விட்டதாக டுவிட்டரில் செய்தியை பரப்பி விட்டனர். ஆதாரமாக ஃபூ உறங்கும் படம் ஒன்றையும் வெளியிட்டனர். இச்செய்தியைப் படித்த அதன் ரசிகர்கள் சோகத்தில் மூழ்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே ஜஸ்டின் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஃபூவின் படமொன்றை வெளியிட்டார். அதன் பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டனர் ஃபூ ரசிகர்கள்.

உலகின் மிக அழகான, பிரபலமான நாய் -ஃபூ என்ற பெயரில் லீ என்பவர் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். தனியார் விமானம் ஒன்றின் விளம்பர தூதராகவும் சில காலம் ஃபூ இருந்தது.

அழகழகான் உடைகளை போட்டு ஃபூவை விதவிதமாக படம் பிடித்து தான் ரசித்ததோடு அதன் ரசிகர்களும் ரசிக்க செய்கிறார் ஜஸ்டின்.

1 2 3 4 5 6 7 8