93 இலட்சம் பயனர்களின் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம்!!

1758

வாட்ஸ்அப்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்தியாவில் ஜூலையிலிருந்து மொத்தம் 93 லட்சம் பயனர்களின் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம், கடந்த செப்டம்பரில் மட்டும் 22 லட்சம் கணக்குகளை முடக்கியதாகத் தெரிவித்துள்ளது.



இது தொடர்பான அந்நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், கணக்குகளை முடக்கவும், பாதுகாப்பு தொடர்பாகவும் செப்டம்பரில் 560 பயனர்கள் புகாரளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘ரிபோர்ட்’ வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் அளித்த எதிர்மறை கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.