யார் இறைவன்..

856

 

கொண்டவன் மீளாதுயிலினில்
அவள் மீளா துயர்தனில்
அவன் கொடுத்தவன் ஆறாப்பசிதன்னில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அடுப்பேறும் அயல் பாத்திரங்கள்
அவள் தொட்டு பளபளக்கும்
அவள் வீட்டு பாத்திரங்கள்
எப்பொதும் மினுமினுக்கும்..

தேய்த்திடும் பாத்திரத்தில்
தேடுவாள் ஒரு வாய் உணவு
எதிர் வீட்டு வளவினில்
நிலத்தினுள் சோறு..



கடைத்தெரு அவளும் சென்றால்
காளையர் துன்பக்கேடு
வந்திடு இரண்டு நாட்கள்
தந்திடுவேன் தங்கம் என்பார்..

மானத்தமிழன் மனைவியவள்
கற்பு தனை காக்க
உயிர் போக்கிடும் குலமகள்..

அவன் இருந்த போது
ஊருக்குள் நல்லதென்றால்
உதவிடும் முதல் மனிதன்
பிறர் வாழ்வுக்கு
பாடுபட்ட கறையில்லா
துாய நெஞ்சன்..

கறை நீக்கும் அவள்
மனக்குறை தனை நீக்கிட
யார் வருவார்..

மறு வாழ்வு அவளிற்கு
அளித்தால்
உனைவிட யார் இறைவன்…

-திசா.ஞானசந்திரன்-