விபத்தில் உயிரிழந்த கணவனுக்காக கோவில் கட்டி பூஜை செய்யும் காதல் மனைவி : இந்த காலத்தில் இப்படி ஒரு மனைவியா?

1615

இந்தியாவில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்தியாவில் விபத்தில் உயிரிழந்த கணவருக்காக, அவரின் மனைவி கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வருகின்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திர மாநிலத்தில் தான் இப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கணவன் உயிருடன் இருக்கும் பொழுதே மதிக்காத பெண்கள் மத்தியில் இப்படி ஒரு மனைவியா என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அங்கி ரெட்டி-பத்மாவதி தம்பதி. விவசாய தொழில் செய்து வந்த அங்கி எதிர்பாராதவிதமாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனால் எப்பொழுதும் கணவனின் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்த பத்மாவின் கனவில் தனக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று கணவர் சொன்னதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பத்மாவதி மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து சேமிப்பு பணத்தை வைத்து கோவில் கட்டியுள்ளனர். தினமும் பத்மாவதி கணவரின் சிலைக்கு பூஜை, பூ போன்றவை செலுத்தி கணவனே கண்கண்ட தெய்வமாய் வணங்கி வருகிறார்.

கணவரின் பிறந்தநாள் மற்றும் பெளர்ணமி நாட்களில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார் பத்மாவதி. இவ்வுலகத்தில் காதலிக்காக ஏன் நடிகைக்காக கூட கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.

ஆனால் கணவருக்காக மனைவி கோவில் கட்டியது இதுதான் முதல் முறை என்று பலரால் பாராட்டப்பட்டு வருகின்றது.