மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விட்டது – மலேசிய பிரதமர்..!

557

MH370காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது என்பதை புதிய தகவல்களை காண்பிப்பதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

லண்டனின் இம்மர்சாட் செய்திமதி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, விமானம் கடைசியாக தென்பட்டது ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்துக்கு மேற்கே இருக்கின்ற கடற்பரப்பில் தான் என்றும் அது அங்கு தான் காணாமல் போய் விட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அத்தோடு விமானத்தில் இருந்த 239 பேரில் ஒருவரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும், விமானத்தில் இருந்தவர்களின் உறவினர்களிடம் இந்த தகவல்கள் கூறப்பட்டுவிட்டதாகவும் மலேசிய பிரதமர் கூறியுள்ளார்.

(BBC TAMIL)