மனைவியை சங்கிலியால் கட்டி வீட்டுக்குள் சிறை வைத்த கணவன்..!

504

HUSBANDமனைவியை சங்கிலியால் கட்டிவைத்து வீட்டுக்குள்ளேயே சிறை வைத்த சம்பவம் இந்திய மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சட்டர்புர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் விமலா அகிர்வார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவரது கணவர் தினமும் குடித்து விட்டு விமலா அகிர்வாரை கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.



மேலும் இருவருக்கும் சண்டை வலுக்கவே ஆத்திரமடைந்த கணவன் மனைவியை சங்கிலியால் காலிலும் கையிலும் கட்டி வீட்டுக்குள்ளேயே சிறை வைர்த்துள்ளார்.

பிறகு அக்கம் பக்கத்தினர் மூலம் பொலிசாருக்கு தகவல் போக அவரை மீட்டு, கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.