இனி நடிக்கக்கூடாது! சினேகாவுக்கு பிரசன்னா தடை..!

499

prassnehaஇனிமேல் சினிமாவில் நடிக்கக் கூடாது’ என்று கணவர் பிரசன்னா திடீர் ரெட்கார்டு போட்டதால் நடிகை சினேகா அதிர்ச்சியடைந்துள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் சினிமாவில் நடிப்பதை பெரும்பாலும் அவர்களது கணவர்கள் விரும்புவதில்லை. ஒரு சில நடிகைகள் தான் இதில் விதிவிலக்கு.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மற்றபடி நடிகைகளுக்கு அவர்களது கணவர்கள் ‘ரெட்கார்டு’ போட்டு விடுவார்கள். அதிலும் சில நடிகைகளை அவரது கணவன்மார்கள் நாயகனுடன் டூயட் பாட விடுவதில்லை. மாறாக அக்கா, அண்ணி, அம்மா போண்ற கதாபாத்திரங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுப்பார்கள்.

நடிகை சினேகாவை காதல் திருமணம் செய்த நடிகர் பிரசன்னாவும் இப்போது சினேகாவின் நடிப்பாசைக்கு திடீர் தடை போட்டிருக்கிறாராம். ஏற்கனவே ஜவுளிக்கடை திறப்பு, நகைக்கடை திறப்பு, ரியல் எஸ்டேட் என எல்லாத் திறப்பு விழாக்களுக்கும் போய் பணம் சம்பாதிக்கிறார் சினேகா.



கூடவே தேடி வருகிற விளம்பரப்படங்களையும் விட்டு வைப்பதில்லை. எந்த பப்ளிசிட்டியாக இருந்தாலும் கூடவே பிரசன்னாவையும் துணைக்கு அழைத்துச் செல்லும் அவர் பிரசன்னாவுக்கும் சேர்த்து தான் வசூல் செய்கிறார்.

இதற்கிடையே சினேகா தற்போது பிரகாஷ்ராஜ் தயாரித்து வரும் ‘உன் சமையலறையில்’ உட்பட ஒரு தெலுங்கு, ஒரு கன்னடப் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

அவரின் இந்த நாயகி தரிசனத்துக்குத்தான் திடீர் தடை போட்டிருக்கிறார் பிரசன்னா. ஆனால் சினேகாவோ என்னால் நடிக்காமல் இருக்க முடியாது என்று பிரசன்னாவின் பேச்சை மீறி அடுத்தடுத்து படங்களை ஒப்பந்தம் செய்து நடித்து வருகிறார்.

அப்புறமென்ன, ”நான் எவ்ளோ சொல்லியும் கேக்க மாட்டேங்கிறா” என்பது தான் பிரசன்னாவின் ஒரே புலம்பலாக இருக்கிறதாம்.