சாதனைகளைத் தகர்த்து வெற்றியீட்டிய நெதர்லாந்து அணி..!

436

nethடுவென்டி-20 உலக கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணியை நெதர்லாந்து அணி அதிரடியாக வீழ்த்து சூப்பர்-10 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

வங்கதேசத்தில் ஐந்தாவது ஐசிசி உலக கிண்ண டுவென்டி-20 போட்டிகள் நடந்து வருகிறது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இப்போட்டியின் இன்றைய தகுதிச் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து- அயர்லாந்து அணிகள் மோதின.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அயர்லாந்து அணி அதிரடியாக ஆடி 4 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்தது.



இந்நிலையில்(நெட் ரன்ரேட் படி) 14.2 ஓவரில் 190 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றால் சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம் என களமிறங்கிய நெதர்லாந்து அணி விஸ்வரூபம் எடுத்தது.

அந்த அணி 13.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது, இதனையடுத்து சூப்பர் 10 சுற்றுக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுவிட்டது.

நெதர்லாந்தின் இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து மற்றும் சிம்பாப்வே அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

மற்றொரு அம்சமாக சர்வதேச டி20 அதிக சிக்ஸர்களை(19 சிக்ஸர்கள்) அடித்து நெதர்லாந்து உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தோடு குறைந்த ஓவர்களில் நூறு ஓட்டங்களைக் குவித்த அணி, பவர்பிளே ஓவர்களில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளது. இதேவேளை இந்தப்போட்டியில் மொத்தமாக 30 சிக்ஸர்களை இரு அணிகளும் சேர்ந்து விளாசித்தள்ளின.