பெற்றோர் மிரட்டி விபச்சாரத்தில் தள்ளினர்: சிறுமி கண்ணீர் வாக்குமூலம்..!

829

child-prostituteகடன் மற்றும் வறுமை நிலையை காரணம் காட்டி பெற்றொரே தன்னை மிரட்டி, வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆசிய கண்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

துபாயின் ஒரு பகுதியில் வேலைக்காக வந்து தங்கியுள்ள ஆசிய இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது 16 வயது மகளும் ஒரு வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் வந்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதனையடுத்து, அந்த வீட்டை முற்றுகையிட்ட பொலிசார், பாடசாலை மாணவியான அந்த 16 வயது சிறுமியையும், அவரது பெற்றோரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது வாக்குமூலம் அளித்த சிறுமி, கடன் மற்றும் குடும்ப வறுமையை காரணம் காட்டி பெற்றொரே தன்னை மிரட்டி, வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கண்ணீர் பொங்க நீதிபதியிடம் தெரிவித்தார்.