வானில் கோலாகலமாக நடந்த திருணம் : மண்டபமாக மாறிய விமானம்: வைரலாகும் தமிழ் ஜோடி!!

1773

வானில் நடந்த திருணம்…

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ள நிலையில் தமிழ் ஜோடி ஒன்று அந்தரத்தில் உறவினர்களுடன் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.



தமிழகத்தில் இன்று முதல் மே 31ம் திகதி வரை தளர்வில்லா ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. இதனால், திருமணங்கள் உட்பட சுப நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ராகேஷ்-தக்ஷினா தம்பதி கொரோனா கட்டுப்பாடுகளை தவிர்க்க உறவினர்களுடன் அந்நதரத்தில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இதற்காக ராகேஷ்-தக்ஷினா தம்பதி விமானம் ஒன்றை 2 மணிநேரத்திற்கு வாடகை எடுத்து, அதில் உறவினர்களுடன் பறந்து, அந்தரத்தில் திருமணம் செய்துள்ளனர்.

விமானத்திற்குள் கேட்டி மேளம் முழங்க உறவனர்கள் முன்னிலையில் மணமகன் ராகேஷ் மணமகள் தக்ஷினா கழுத்தில் தாலி காட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில், நடுவானில் விமானத்தில் நடந்த திருமணம் குறித்து விசாரணை நடத்த சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.