வவுனியாவில் தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் திணைக்களத்திற்குள் உள்ளீர்ப்பது தொடர்பில் செயலமர்வு!!

1454

செயலமர்வு..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வடமாகாணத்தில் தமிழ் மொழி பேசும் இளைஞர், யுவதிகளை பொலிஸ் திணைக்களத்திற்குள் உள்ளீர்ப்பது தொடர்பான செயலமர்வு ஒன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (23.04) இடம்பெற்றது.



இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் வடமாகாண பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண,

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரட்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

வடமாகாணத்தின் தமிழ் மொழி பேசும் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை பொலிஸ் திணைக்களம் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு தேவையான ஆலோசனை வழிகாட்ல்களை இளைஞர் யுவதிகளுக்கு வழங்குமாறும் இதன்போது பொலிஸ் அதிகாரிகளினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் சமன் பந்துல சேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், வவுனியா வடக்கு கல்வி வலய அதிகாரிகள், படசாலை அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக இளைஞர் வலிவூட்டல் உத்தியோகத்தர்கள், கல்வி துறை சார்ந்தோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.