இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஜில்லா..!

313

கொலிவுட்டில் தலைவா திரைப்படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஜில்லா.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

ஏற்கெனவே துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் நடித்திருக்கிறார். இந்நிலையில் விஜய்-காஜல் அகர்வால் ஜோடி சேரும் இரண்டாவது படம் இதுவாகும்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவர்களுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை மதுரை மற்றும் காரைக்குடி பகுதிகளில் படமாக்கிய படக்குழு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வந்தனர்.



இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் விஜய் பிறந்த நாளான சனிக்கிழமை அன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

முதற்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்காத விஜய் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார்.

இரண்டுகட்டமாக இதுவரை 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது.

மேலும் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.