உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்ட இளம் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

3150

நிலான்ஷி படேல்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உலகில் மிக நீளமான தலைமுடி கெண்ட பெண் ஒருவர் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த இளம்பெண் நிலான்ஷி படேல் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.



இவரது 5.7 அடி கூந்தல் தற்போது கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் பாப் கட் செய்திருந்தேன். ஒருகட்டத்தில் எனக்கே அது பிடிக்காமல் போனது. பின்னர் என் பெற்றொரிடன் இனி நான் தலைமுடியை வெட்ட போவதில்லை என கூறினேன்.

அது நாள் முதல் இன்று வரை நான் எனது தலைமுடியை வெட்ட வில்லை. அதன் பரிசாக தற்போது உலக சாதனை சான்றிதழை ஏந்தி நிற்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலான்ஷியின் இந்த முயற்சியை அங்கிகரிக்கும் வகையில், கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அவருக்கு சாதனை சான்றிதழ் வழங்கியுள்ளது.