மீண்டும் அண்ணனுடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி..!

815

கொலிவுட்டில் ரவி மற்றும் அவரது அண்ணன் ராஜா ஆகிய இருவரும் ஜெயம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.
ரீமேக் இயக்குனர்களில் மிகவும் பிரபலமானவராகிய ஜெயம் ராஜா, இவர் அறிமுகமான ஜெயம் படத்திலிருந்து கடைசியாக இயக்கிய வேலாயுதம் படம் வரை அனைத்துப் படங்களும் ரீமேக் படங்களே.

இவை அனைத்தும் தெலுங்கில் ஹிட் அடித்த படங்கள். அதில் பெரும்பாலான படங்களை தம்பி ரவியை வைத்து இயக்கி இருந்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஒரே ஒரு படத்தில் மட்டும் விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஜெயம் ராஜா மீண்டும் ஒரு புதிய படத்தில் தம்பியுடன் இணைகிறார்.

கடைசியாக 2010ம் ஆண்டில் ஜெயம் ராஜா – ஜெயம் ரவி கூட்டணியில் தில்லாலங்கடி திரைப்படம் வெளியானது.



சுமார் 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்பு மீண்டும் இந்தக் கூட்டணி கைகோர்க்க இருக்கிறது. இதற்காக ஒரு சூப்பரான கதையை தயார் செய்த ஜெயம் ராஜா அதனை தம்பி ஜெயம் ரவியிடம் கூறி சம்மதம் வாங்கி விட்டாராம்.

இதில் ஜெயரம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.